தற்போதைய செய்திகள்

விழுப்புரம்: மாணவர்களுக்கு விருது வழங்கிய அமைச்சர் சி.வி.சண்முகம்

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாணவர்களுக்கு காமராஜர் விருதினையும், அரசு நிதி உதவிகளையும் அமைச்சர் சிவி சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்டத்தில் 2018-19ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணக்கர்களுக்கு, பெருந்தலைவர் காமராஜர் விருதுகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

காமராஜர் விருது மற்றும் காசோலைகள் (10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.10,000, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.20,000 என மொத்தம் 18 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட து.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச் செல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT