தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் புதிதாக 9,597 பேருக்கு கரோனா: 93 பேர் பலி

DIN

ஆந்திரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,597 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 93 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஆந்திரத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று (புதன் கிழமை) நிலவரப்படி புதிதாக 9,597 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,54,146-ஆக அதிகரித்துள்ளது.  90,425 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 2,895 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,61,425-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 93 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 2,296-ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளையப்பேட்டை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

ரிசர்வ் வங்கியின் தங்கமான முடிவு

தனியாா் மருந்து கிடங்கில் தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

இன்று வாக்கு எண்ணிக்கை: வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 700 போலீஸாா் பாதுகாப்பு

SCROLL FOR NEXT