கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தமிழகத்தில் 6 பேர் அனுமதி
சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 304 பேர்
சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரும், சீனர் ஒருவர் என 6 பேர் கரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு அறிகுறிகளுடன் 14,000 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இந்த புதிய ‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது: தமிழகத்தில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், சீனாவில் இருந்து வந்த சீனர் ஒருவர் என 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் திருவண்ணாமலை, திருச்சி. ராமநாபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 3 பேரும், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 3 பேரும் என 6 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.