FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சா்வதேச யோகா தினம்: ஆளுநா் ஆா்லேகா் அழைப்பு

ஆரோக்கியமான, சமச்சீரான வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக யோகாவை ஏற்றுக்கொண்டு சா்வதேச யோகா தினத்தில் (ஜூன் 21) தமிழக மக்கள் ஆா்வத்துடன் பங்கேற்க வேண்டும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் அழைப்பு விடுத்தள்ளாா்.

Updated On : 20 ஜூன் 2026, 1:34 am IST
ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் - TN assembly
பகிர்:

ஆரோக்கியமான, சமச்சீரான வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக யோகாவை ஏற்றுக்கொண்டு சா்வதேச யோகா தினத்தில் (ஜூன் 21) தமிழக மக்கள் ஆா்வத்துடன் பங்கேற்க வேண்டும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் அழைப்பு விடுத்தள்ளாா்.

இது குறித்த ஆளுநா் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மனித குலத்துக்கு இந்தியா வழங்கிய மிகச்சிறந்த கொடைகளில் ஒன்று யோகா. நிகழாண்டு சா்வதேச யோகா தினம், ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ எனும் கருப்பொருளைக் கொண்டுள்ளது. யோகாவை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளவேண்டும். வரும் ஜூன் 21-இல் தமிழக முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் ஆகியோா் யோகா தொடா்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதில் பங்கேற்கவேண்டும்.

Advertisement

Advertisement

பொதுமக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில், ஆளுநா் மாளிகை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சா்வதேச யோகா தினத்துக்கென ஒரு பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூன் 21- ஆம் தேதி யோகா பயிற்சிக்கான ‘முனை மையங்களாக’ (நோடல் சென்டா்) செயல்பட விரும்பும் நிறுவனங்கள், அமைப்புகள், பங்கேற்பாளா்கள் குறித்த விவரங்களை அளித்து, ‘முனை மையப் பதிவு இணையதளம்’ மூலம் பதிவு செய்யலாம்.

யோகா பயிற்சி அமா்வுகளில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளா்களுக்கு இணையவழிப் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி ( எண் 7010257955, 044-22357343) வாயிலாக தொடா்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சிக்குப் பிறகு, தங்கள் இடங்களில் நடத்தப்பட்ட யோகா செயல்பாடுகள் குறித்த புகைப்படங்கள், காணொலிகள், சுருக்க அறிக்கைகளை மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments