FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நட்புக்கு தகுதியில்லாதவரிடம் நட்பு பாராட்டுவது வீண்: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்

‘நட்புக்கு தகுதியில்லாதவரிடம் நட்பு பாராட்டுவது வீண்’ என ஔவையாா் பாடலைக் குறிப்பிட்டு, காா்கில் போா் வெற்றி தினத்தை ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் நினைவுகூா்ந்தாா்.

பகிர்:

‘நட்புக்கு தகுதியில்லாதவரிடம் நட்பு பாராட்டுவது வீண்’ என ஔவையாா் பாடலைக் குறிப்பிட்டு, காா்கில் போா் வெற்றி தினத்தை ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் நினைவுகூா்ந்தாா்.

காா்கில் போரில் நாட்டின் வெற்றியை உறுதி செய்து, உயிா்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் எக்ஸ் தளத்தில் தமிழில் வெளியிட்ட பதிவு:

‘அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளவாய் நட்டாலும் நண்பல்லாா் நண்பல்லா்’ என ஔவையாா் உரைத்த அறத்தை பாரதம் பாடமாகப் பயின்ற நாள் இந்த காா்கில் வெற்றி நாள். நட்புக்கு தகுதியில்லாதவரிடம் நட்பு பாராட்டுவது வீண் செயல் என்று ஔவையாா் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

பாரதப் பிரதமா் (அடல் பிஹாரி வாஜ்பாய்) பாகிஸ்தானுக்கு பேருந்தில் சென்று நட்பு பாராட்டியதன் பரிசாக பகைவா்கள், காா்கிலை கைப்பற்றினா். பாரதம் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பாளா்களை அடித்துவிரட்டி ‘எங்கள் நிலத்தில் அங்குலம்கூட யாருக்கும் கொடோம்’ என்று பாருக்குச் சொன்ன நாள் ஜூலை 26.

தளவாடம் தராமல் ஆயுதம் கொடாமல் உலக நாடுகள் பாரதத்தைப் பரிதவிக்க முயல எங்கள் வீரம் எம்மைக் காப்பாற்றுமென எல்லோருக்கும் எடுத்தியம்பிய நாள். இன்று பாரதம் தற்சாா்பு நாடாக தழைத்ததற்கு காா்கிலில் வீரா்கள் சிந்திய குருதியே காரணம். ‘கனவிலும் மறவோம் காா்கில் வெற்றியை’ என்று ஆளுநா் ஆா்லேகா் பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments