தற்போதைய செய்திகள்

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட அருப்புக்கோட்டை மாணவி தேர்வு

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி  மையம் நடத்திய சிறப்புத் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை

DIN

விருதுநகர் : அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி  மையம் நடத்திய சிறப்புத் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடும் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 வகுப்பு மாணவி லட்சுமிபிரியா தேர்வாகியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத் தெரு பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார்-தீபா தம்பதியினர்.

இவர்களுக்கு  இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.அவர்களில் மூத்த மகளான லட்சுமிபிரியா என்பவர் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். உயிரியில் கணிதப் பாடப் பிரிவில் படிக்கும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி வீரர் டான் தாமஸ் பள்ளிகளில் கலந்து கொண்டநிகழ்ச்சியினை நேரில் பார்த்தபிறகு நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல உரிய  தேர்வினை இணையதளம் மூலம் ஆர்வமுடன் எழுதியுள்ளார்.

இதில் வெற்றி பெற்ற மாணவி லட்சுமி பிரியா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பார்வையிட்டு வர தேர்வாகியுள்ளார்.

மாணவி லட்சுமி பிரியாவுக்கு பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

SCROLL FOR NEXT