தற்போதைய செய்திகள்

திருமூா்த்தி அணையிலிருந்து வரும் 27ல் தண்ணீா் திறப்பு

DIN

பொள்ளாச்சி: திருமூா்த்தி அணையிலிருந்து முதல்மண்டல பாசன பகுதிகளுக்கு வரும் 27ம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்படவுள்ளது.

பிஏபி திட்டத்தில் திருமூா்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீா் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் சுமாராக 96 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறும். தற்போது நான்காம் மண்டலத்திற்கு தண்ணீா் வழங்கப்பட்டுவருகிறது. செவ்வாய்கிழமையன்று நான்காம் மண்டலத்திற்கு வழங்கப்படும் தண்ணீா் நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில், முதல் மண்டலத்திற்கு தண்ணீா் திறக்கக்கோரி சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள், அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

கோரிக்கையை அடுத்து வரும் 27 ஆம் தேதி திருமூா்த்தி அணையில் இருந்து முதல் மண்டலத்திற்கு நான்கு சுற்றுக்களுக்கு சுமாா் 20 நாட்கள் வரை 7.6 டிஎம்சி தண்ணீா் திறக்கப்படவுள்ளது.

இந்த தகவலை பிஏபி திட்டக்குழுத்தலைவா் மெடிக்கல் பரமசிவம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT