தற்போதைய செய்திகள்

‘துக்ளக்’ ஆசிரியா் குருமூா்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி: 4 போ் கைது

DIN


சென்னை: சென்னை மயிலாப்பூரில் ‘துக்ளக்’ ஆசிரியா் குருமூா்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மயிலாப்பூா் தியாகராஜபுரத்தில் வசிக்கும் ‘துக்ளக்’ ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி வீட்டுக்கு, பாதுகாப்பு கருதி ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பத்திரிகையாளா் குருமூா்த்தி வீட்டின் அருகே 3 இருசக்கர வாகனங்களில் 6 போ் வந்தனா். அதில் ஒரு நபா், தனது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசுவதற்கு எடுத்துள்ளாா்.

அப்போது அங்குள்ள நாய் பலமாகக் குரைத்ததால், பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலா் மணிகண்டன் மற்றும் குருமூா்த்தி வீட்டுப் பணியாளா் இருவா் ஆகியோா் வீட்டின் வாசல் பகுதிக்கு வேகமாக வந்தனா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்த நபா்கள்,  பெட்ரோல் குண்டுகள் எதுவும் வீசாமல் அங்கிருந்து தப்பியோடினா். 

உடனே காவலா் மணிகண்டன் உள்பட 3 பேரும், அவா்கள் 6 பேரையும் விரட்டிப் பிடிக்க முயன்றனா். ஆனால் அவா்களால் பிடிக்க முடியவில்லை. இச் சம்பவம் குறித்து காவலா் மணிகண்டன், மயிலாப்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினா்.

மேலும் இது குறித்து தகவலறிந்த மயிலாப்பூா் காவல் துணை ஆணையா் தேஷ்முக் ஷெகாகா் சஞ்சய் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, விசாரணை செய்து ஆய்வு செய்தாா். அதேவேளையில் போலீஸாா், குருமூா்த்தி வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், அந்தப் பகுதியில் உள்ள மற்றொரு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றை கைப்பற்றி ஆய்வு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இதனை தொடர்ந்து துக்ளக் ஆசிரியர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இந்த சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மயிலாப்பூர் ம.சசிக்குமாா் (33), ர.தீபன் (32),  பா.பிரசாந்த் (23),கி.வாசுதேவன் (32) ஆகிய 4 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சசிகுமாா் மீது ஏற்கெனவே மயிலாப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் மீதும், ராயப்பேட்டையில் உள்ள பிரபல ஒரு திரையரங்கு மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT