தற்போதைய செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக பெருந்துறையில் 36 மி.மீ பதிவு

DIN

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை முதல் இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதியில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. 

இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக பெருந்துறையில் 36 மி.மீட்டர் மழை பதிவானது. 

மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில்: ஈரோடு-25, பெருந்துறை-36, கோபி-6.2, தாளவாடி-5, சத்தி-4, பவானிசாகர்-1.2, பவானி-21.2, கொடுமுடி-3.6, நம்பியூர்-11, சென்னிமலை-11, மொடக்குறிச்சி-35, கவுந்தப்பாடி-23.6, எலந்தகுட்டை மேடு-25, அம்மாபேட்டை-17.4, குண்டேரிப்பள்ளம்-7.4, வரட்டுப்பள்ளம்-9.4 என மாவட்டம் முழுக்க 242 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT