தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 93,983; பலி 1,935 -ஆக உயர்வு

DIN



இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில்  4,734 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 93,983-ஆக உயா்ந்துள்ளது.

இதேபோல், கரோனாவால் முன்னெப்போதும் இல்லாதவாறு ஒரே நாளில் 97 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,935-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரில் 59,467 போ் சிகிச்சையில் உள்ளனா். 32,581 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். 

அதிகபட்சமாக நாட்டின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் 35,308 பேரும், தெற்கு சிந்து மாகாணத்தில் 34,889 பேரும், வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 12,459 பேரும், தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குறைந்தது 5,776 பேரும், தலைநகர் இஸ்லாமாபாத்தில் 4,323 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 6,60,508 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கடுமையான நிர்வாக நடவடிக்கைகளை எடுக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT