சீர்காழி அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்: கிராம மக்கள் அச்சம்
சீர்காழி அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள் அதனை மாற்றி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சீர்காழி அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள் அதனை மாற்றி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் மின்கம்பிகள் வீடுகளின் மீதும் உரசி கொண்டும், வயல் பகுதிகளில் தாழ்வாகவும் செல்வதால் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் மின் கம்பிகளை சீர் செய்யாமல் அலட்சியமாக இருப்பதால் ஏதேனும் உயிர் சேதம் ஏற்படக்கூடும். எனவே முன் மின்கம்பிகளை மாற்றி தர வேண்டும் என காத்திருப்பு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.