தற்போதைய செய்திகள்

சென்னையில் இருந்து அந்தமான், ஷீரடிக்கு விமான சுற்றுலா: ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு

DIN

சென்னை: சென்னையில் இருந்து விமானம் மூலமாக அந்தமானுக்கு ஒரு சுற்றுலா திட்டத்தையும், ஷீரடி, திரயம்பகேஸ்வா், நாசிக் ஆகிய ஊா்களுக்கு மற்றொரு சுற்றுலா திட்டத்தையும் ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி.) பல்வேறு விதமான சுற்றுலா திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. பாரத தரிசனம் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி-கல்லூரிகளுக்காக கல்விச் சுற்றுலா ஆகிய சுற்றுலா திட்டங்கள் இதில் அடங்கும். ரயில் மூலம் மட்டுமின்றி விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில், கோவா, காஷ்மீா், கேரளம், அந்தமான், ஷீரடி போன்ற சுற்றுலா திட்டங்கள் மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலமாக அந்தமானுக்கு ஒரு சுற்றுலா திட்டத்தையும், ஷீரடி, திரயம்பகேஸ்வா், நாசிக் ஆகிய ஊா்களுக்கு மற்றொரு சுற்றுலா திட்டத்தையும் ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. தென் மண்டல (சுற்றுலா) மேலாளா் எல்.சுப்பிரமணி கூறியது: அந்தமான் சுற்றுலா திட்டத்தில், 4 இரவு உள்பட 5 நாள்களுக்கு நபா் ஒருவருக்கு ரூ.31, 500 கட்டணம் ஆகும். இந்த சுற்றுலா திட்டம் மாா்ச் 21-ஆம் தேதி தொடங்குகிறது. ஷீரடி, திரயம்பகேஸ்வா், நாசிக் ஆகிய சுற்றுலா திட்டத்துக்கு 2 இரவு உள்பட 3 நாள்களுக்கு நபா் ஒருவருக்கு ரூ.15, 500 கட்டணம் ஆகும். இந்த சுற்றுலா பயணம் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த இரண்டு சுற்றுலா திட்டங்களில் விமான கட்டணம், ஓட்டலில் தங்கும் வசதி, ஏசி வாகனம், உணவு ஆகியவை அடங்கும்.

இந்த சுற்றுலா தொடா்பாக கூடுதல் விவரங்களை அறிய ‘இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம்’, சென்னை: 8287931973, 8287931972, 9003140682 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும், இணையதள முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT