தற்போதைய செய்திகள்

ஆசாரிப்பள்ளம் கரோனா வார்டில் இறந்தவர்களுக்கு பல்வேறு நோய்கள் இருந்தன: மருத்துவக்கல்லூரி முதல்வர் பேட்டி 

DIN

நாகர்கோவில்: நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் கரோனா வார்டில் சனிக்கிழமை உயிரிழந்த 3 பேருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் இருந்தன. பொதுமக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்றார் மருத்துவக்கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி.

இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள்யாருக்கும் இதுவரை கரோனா பாதிப்பு இல்லை. உயிரிழந்த 66 வயதுடைய மரியான் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக நீரீழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர் 2  சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி பிற்பகல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணிக்கு உயிரிழந்தார். அவரது இறப்புக்கு சிறுநீரக கோளாறும் உயர் ரத்த அழுத்தமுமே காரணமாகும். ரத்தபரிசோதனை முடிவுகள் இன்று இரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேபோல் உயிரிழந்த 2 வயது ஆண் குழந்தைக்கு பிறவி குறைபாடுள்ளது. இந்த குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு நோயும் வந்துள்ளது. இந்த குழந்தை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6.10 மணிக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு 10.30 மணிக்கு இறந்துள்ளது. இந்த குழந்தையின் ரத்த மாதிரியும் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

உயிரிழந்த 24 வயதுடைய ராஜேஷ் என்பவருக்கு கடந்த 5 நாள்களாக காய்ச்சல் மற்றும் மூச்சுதிணறல் இருந்ததால் அவர் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார் அவரும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இறந்தார். இவரது ரத்த மாதிரியும் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்தால் தான் உறுதியாக கூற முடியும் பொதுமக்கள் வீண்வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார் அவர்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT