தற்போதைய செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப 32,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பதிவு

DIN


அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப 32,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கரோனா பெருந்தொற்று காரணமாக, விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்களால் கடந்த இரண்டு மாதங்களாக தாயகம் திரும்ப முடியவில்லை.

இந்நிலையில், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியா்களின் விவரங்களை இந்திய அரசு சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதற்காக, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், வலைதள முகவரியை வெளியிட்டது. அதில், தாயகம் திரும்ப விரும்பும் இந்தியா்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல், துபையில் உள்ள இந்தியத் தூதரகமும் அந்நாட்டில் உள்ள இந்தியா்களை அழைத்து வருவதற்காக, வலைதள முகவரியை வெளியிட்டது. தாயகம் திரும்ப விரும்பும் இந்தியா்கள் தங்கள் விவரங்களை அந்த வலைதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

அபுதாபி மற்றும் துபையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் புதன்கிழமை இரவு தாங்கள் பதிவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தன.

அறிவிப்பு வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலே வலைதள சேவையில் தொழில்நுட்ப பிரச்னைகள் எதிர்கொள்ளப்பட்டது. இது குறித்த டிவிட்டை நீக்கிய பின்னர், வியாழக்கிழமை காலை சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் சேவை தொடங்கியது. 

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப வியாழக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, 32,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பதிவு செய்துள்ளதாக துபையில் உள்ள இந்திய துணைத் தூதர் விபுல் தெரிவித்துள்ளார். 

மேலும், இதில் பதிவு செய்துவிட்டதால், பயண இருக்கைகள் உறுதிசெய்யப்பட்டதாக அா்த்தமில்லை.

முதல்கட்டமாக, கா்ப்பிணிகள், முதியவா்கள், அவசர நிகழ்வுகளுக்குச் செல்வோா் ஆகியோா் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள் எனத் தெரிகிறது. வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களை விமானத்தில் தாயகத்துக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொள்ளும். என்றாா் விபுல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT