தற்போதைய செய்திகள்

சாத்தூரில் தன்னார்வலர்கள் சார்பாக நிவாரணப் பொருட்கள்

DIN


சாத்தூர்: சாத்தூரில் தன்னார்வலர்கள் சார்பில் ஏழைகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மற்றும் ஏழைகளுக்கு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தன்னார்வலர்கள் சார்பிலும் ஏழை எளியவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சாத்தூரில் தன்னார்வலர்கள் சார்பில் இந்த பகுதியில் வசிக்கும் ஏழை எளியவர்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சாத்தூர் நகர காவல் ஆய்வாளர் சுபக்குமார் தலைமையிலும் தனியார் நிறுவனம் உரிமையாளர் சோலைராஜ், தங்கமணிகண்டன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட   பொதுமக்கள் கலந்து கொண்டு  சமூக இடைவெளியை கடைபிடித்து அத்தியாவசிய பொருள்களை வாங்கிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT