தற்போதைய செய்திகள்

கரோனா விழிப்புணர்வு பாடல் குருந்தகட்டை வெளியிட்ட பெண் காவலர்

DIN


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வரும் சசிகலா என்பவர் பாடிய கரோனா விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் நாகலிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பாடல் பாடுவதில் திறமைமிக்கவரான இவர் கரோனா குறித்த விழிப்புணர்வு பாடலைஎழுதி, பாடி உள்ளார்.இவரது பாடலை கேட்ட கும்மி டிப்பூண்டி காவலர்கள் இந்த பாடலை குறுந்தகட்டில் பதிவு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவிற்கு கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ரமேஷ் தலைமை தாங்கி கரோனா விழிப்புணர்வு பாடல் குருந்தகட்டினை வெளியிட்டு பாடலை பாடிய பெண் காவலர் சசிகலாவை பாராட்டினார்.

நிகழ்வில் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT