தற்போதைய செய்திகள்

5 ஆயிரம்பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ஊராட்சி தலைவர்

DIN


சீர்காழி:  சீர்காழிஊராட்சி ஒன்றியம் இராதாநல்லூர் ஊராட்சியில் தினமும் 500 பேர் வீதம் 10 நாட்களாக 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி,மளிகை பொருள்,காய்கனி ஆகிய தொகுப்புகளை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கி வருகிறார்.

சீர்காழி அருகே உள்ள இராதாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் க. அகோரம். கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அகோரம், வெற்றி பெற்றது முதலே ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறார். தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இராதாநல்லூர் ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கடந்த 10 நாட்களாக தினந்தோறும் சமூக இடைவெளியுடன் 500 பேர் வீதம் சனிக்கிழமையுடன் 5 ஆயிரம் பேருக்கு 10 கிலோ அரிசி,மளிகை பொருட்கள்,காய்கறி உள்ளிட்ட தொகுப்பினை வழங்கினார். ஊராட்சி தலைவர் அகோரம் தனது சொந்த செலவில் இந்த உதவிகளை வழங்கி வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT