தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு உயர்வு: இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

DIN

தஞ்சாவூர்: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர், கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சிக்கன நடவடிக்கை என்று சொல்லி அனைத்து அரசுத் துறைகளிலும் புதிய பதவிகளை உருவாக்கத் தடை விதித்து தமிழக அரசுப் பிறப்பித்துள்ள உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும். 

இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு 58-லிருந்து 59 ஆக உயர்த்திய அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும், கரோனா நோய் தொற்றைப் பரப்பும் அபாயம் உள்ள டாஸ்மார்க் மதுபானக் கடைகளை உடனே  மூட வேண்டும்.

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 10,000 நிவாரணமாக  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தஞ்சாவூர் கீழ வீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் ஆர்.ஆர். முகில் தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினர் சி. சுதந்திரபாரதி, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலர் சி. செந்தூர்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதேபோல, கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஏஐடியூசி தொழிற் சங்க அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் சு. துர்காதேவி தலைமை வகித்தார். 

மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மு. மணிகண்டன், டி.கே. கோபி, ஏ. லெனின், என். பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT