தற்போதைய செய்திகள்

அதிமுக சார்பில் சங்ககிரி பகுதிகளில் உள்ள1300 கூலித்தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்கள் வழங்கல் 

DIN

சங்ககிரி: அதிமுக சார்பில் சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் 1300 கூலித்தொழிலாளர்களுக்கு  அரிசி மற்றும் உணவுப்பொருள்கள்  வழங்கும் நிகழ்ச்சி  சனிக்கிழமை நடைபெற்றன. 

கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி மே 31ம் தேதி வரை பொது முடக்கம் அறிவித்துள்ளன. அதனையடுத்து தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவினையடுத்து அதிமுக சார்பில் சமூக இடைவெளிக்காக சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், நாகிசெட்டிப்பட்டி, சென்னாநாயக்கன்காடு, வேங்கிப்பாளையம், செங்காளிகாடு புதுவளவு, வரப்பனங்காடு  ஆகிய இரு பகுதிகளில் உள்ள 1300 கூலித்தொழிலாளர்களுக்கு  தலா 10 கிலோ அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களை சங்ககிரி ஒன்றிய மாணவரணி செயலர் கே.வெங்கடாஜலம் தலைமை வகித்து வழங்கினார். 

சங்ககிரி ஒன்றியச் செயலர் என்சிஆர். ரத்தினம், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவி எம்.மகேஸ்வரிமருதாசலம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், அரசு வழக்குரைஞர் ஆர்.சுப்ரமணி, சன்னியாசிப்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் ஆர்.சரண்யா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT