தற்போதைய செய்திகள்

ஹாத்ரஸ்: பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பாதுகாப்புப் பணியில் 60 காவலர்கள்

PTI

ஹாத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு பாதுகாப்புப் பணியில் 60 காவலர்களும், அவர்கள் வீட்டைச் சுற்று 8 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து டி.ஐ.ஜி. சலப் மாத்தூர் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு  பாதுகாப்பிற்காக 60 பேர் கொண்ட காவலர்கள் 12 மணிநேர வேலை பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த காவலர்களை கண்காணிக்க ஒரு உயர் அதிகாரியும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 8 சிசிடிவி கேமாராக்கள் பொருத்தப்பட்டு அதன் உதவியுடன் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என கூறினார்.

ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வால் கூறுகையில், வீட்டின் நுழைவாயிலில் பார்வையாளர்களின் பதிவேடு காவல்துறையினரால் பராமரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் இரண்டு பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது, மேலும் தீயணைப்புத் துறை மற்றும் இரண்டு உள்ளூர் புலனாய்வுப் பிரிவினரும் அங்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

19 வயதான தலித் பெண் செப்டம்பர் 14 ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 28 ஆம் தேதி பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT