கொடைக்கானலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை 
தற்போதைய செய்திகள்

கொடைக்கானலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை

கொடைக்கானலில் கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக மழைப் பெய்து வருகிறது.

DIN

கொடைக்கானலில் கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக மழைப் பெய்து வருகிறது.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில் திங்கள்கிழமை இரவு முதல் மிதமான மழைப் பெய்தது வருகிறது.

அதன்பின் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடைக்கானல் மற்றும் செண்பகனுர், நாயுடுபுரம், பெருமாள்மலை, வடகவுஞ்சி, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.

அதனைத் தொடர்ந்து இரவில் பெய்ய ஆரம்பித்த மழை விடிய விடிய பெய்தது. இந்த மழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கொடைக்கானலில் காற்றுடன் அவ்வப்போது மேக மூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த மழையால் விவசாய நிலங்களில் அன்றாடப் பணி பாதிப்படைய வாய்ப்புள்ளது. கடந்த மூன்று நாட்களாக தொடர் மழையால் குளிர் அதிகரித்து காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

தொழில் தொடங்கும் பெண்கள், திருநங்கைகளுக்கு மானியம்

SCROLL FOR NEXT