முகப்பு
தற்போதைய செய்திகள்

‘யார் வேண்டுமானாலும் ராஜிநாமா செய்யலாம்’: மம்தா

யார் வேண்டுமானாலும் பதவியை ராஜிநாமா செய்யலாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஜனவரி 2021, 4:02 pm IST
மம்தா பானர்ஜி
பகிர்:

யார் வேண்டுமானாலும் பதவியை ராஜிநாமா செய்யலாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்ததையடுத்து, முதல்வர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

அவரது ராஜிநாமா குறித்து மம்தா கூறியதாவது,

Advertisement

Advertisement

‘யார் வேண்டுமானாலும் ராஜிநாமா செய்யலாம். லக்ஷ்மி ரத்தன் சுக்லா தனது ராஜிநாமா கடிதத்தில், விளையாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்க விரும்புவதால் பதவியை ராஜிநாமா செய்வதாகவும், எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

சுக்லாவின் பதவி விலகலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. எனினும் இவர் தொடர்ந்து திரிணமூல் கட்சியில் நீடிப்பார் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டின் இறுதியில் சுவேந்து ஆதிகாரி உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணமூல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.