சென்னை விமான நிலையத்தில் 3.72 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.97 கோடி மதிப்பிலான 3.72 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.97 கோடி மதிப்பிலான 3.72 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக கடத்தல் தங்கங்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
சென்னை விமான நிலையத்தில் துபை மற்றும் சார்ஜா விமானங்களில் வந்த பயணிகளிடமிருந்து 3.72 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்ட செய்தியில்,
சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்ததில், சாக்லேட் கவருக்குள் மறைத்து வைத்து 660 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
மேலும், திரைப்படத்தில் வருவதைப் போல 15 பயணிகளின் வயிற்றிலிருந்து 3.18 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 3.72 கிலோ எடையுள்ள தங்கத்தின் மதிப்பு ரூ. 1.97 கோடி ஆகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.