முகப்பு
தற்போதைய செய்திகள்

தேனியில் தொடர் மழை: வைகை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததையடுத்து கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 ஜனவரி 2021, 4:52 pm IST
வருசநாடு அருகே மூல வைகை ஆற்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
பகிர்:

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததையடுத்து கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்த மழையின் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து  தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வைகை கணக்கான முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

மேலும் முல்லைப் பெரியாறு கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது . வைகை அணைக்கு புதன்கிழமை மாலை 3 ஆயிரத்து 500 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து வியாழக்கிழமை காலை 9 ஆயிரத்து 652  கனஅடியாக உயர்ந்து. கூடுதலான நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியது.

இதனை தொடர்ந்து, கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 68.50 அடியை எட்டியவுடன் இரண்டாம் எச்சரிக்கையும் அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் மூன்றாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் நீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறந்துவிடப்படும்.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் வைகை நீர் மட்டம் ஓரிரு நாளில் முழுக் கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments