கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கரோனா அதிகரிப்பு: கேரள அமைச்சர்

கேரளத்தில் தேர்தலின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

கேரளத்தில் தேர்தலின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில், கேரளத்தில் மட்டும் கணிசமாக குறைந்து வந்தது. இருப்பினும் கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது,

கேரள சட்டப்பேரவை தேர்தலின்போது சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாததால் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் மும்பை வந்தடைந்தார்!

துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

காரிய வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

SCROLL FOR NEXT