தற்போதைய செய்திகள்

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை(ஏப்.17) ஹர்ஷ் வர்தன் ஆலோசனை

ANI

கரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியது,

கரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளேன். மேலும், நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் நிர்வாகத்துடன் திங்கள்கிழமை காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளேன்.

மேலும், நாடு முழுவதும் உள்ள 54 மாவட்டங்களில் கடைசி 7 நாள்களிலும், 44 மாவட்டங்களில் 28 நாள்களில் புதிதாக கரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

கரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை தயாரிக்கும் நிறுவனங்களிடம் உற்பத்தியை அதிகரிக்கும்படி கூறியுள்ளோம். மருந்துகளை அனுமதி இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT