கரோனாவால் பலியான மருத்துவர்கள்: மத்திய அரசின் புள்ளிவிவரத்தை மறுக்கும் மருத்துவ சங்கம் 
தற்போதைய செய்திகள்

கரோனாவால் பலியான மருத்துவர்கள்: மத்திய அரசின் புள்ளிவிவரத்தை மறுக்கும் மருத்துவ சங்கம்

கரோனாவால் 162 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறிய தகவலை இந்திய மருத்துவ சங்கம் மறுத்துள்ளது.

IANS

கரோனாவால் 162 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறிய தகவலை இந்திய மருத்துவ சங்கம் மறுத்துள்ளது.

கரோனாவால் இதுவரை நாடு முழுவதும் 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் மற்றும் 44 சுகாதாரத்துறை பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே தெரிவித்தார்.

இந்த தகவலை மறுத்து மத்திய இணை அமைச்சருக்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் எழுத்தப்பட்டுள்ள கடிதத்தில் இதுவரை 734 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்,

கரோனாவால் 162 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக நீங்கள் தெரிவித்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளோம். இதுவரை நாடு முழுவதும் உயிரிழந்துள்ள 734 மருத்துவர்களின் பெயரை பட்டியலிட்டுள்ளோம்.

கரோனா பேரிடரில் வீட்டில் பாதுகாப்பாக இருக்காமல், சேவை செய்வதற்காக பணிக்கு வந்து தேசத்திற்காக உயிரிழந்துள்ளனர்.   

தரவை சரிபார்ப்பதில் மத்திய அரசின் அக்கறையின்மையைக் கண்டிப்பதுடன், உயிரழந்த மருத்துவர்களின் முழு தரவையும் சரி பார்த்து, அவர்களை கெளரவிக்க உயர் நிலைக் குழு அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT