தற்போதைய செய்திகள்

இந்தியாவில் மேலும் 15 பேருக்கு புதிய வகை கரோனா

ANI


இந்தியாவில் மேலும் 15 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் பயணம் மேற்கொண்டவர்கள், குடும்பத்தினர் மற்றும் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி தொடங்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், பிரிட்டனில் புதிய வகை அதிதீவிர கரோனா கண்டறியப்பட்டதையடுத்து, சமீபகாலமாக பிரிட்டனிலிருந்து வந்த பயணிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT