மழை வெள்ளத்தில் மூழ்கிய ஷெங்ஷூ நகர சாலையைக் கடக்கும் நபா். 
தற்போதைய செய்திகள்

சீனாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹெனானில் 33 பேர் போ் பலி; 8 பேரை காணவில்லை

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த மழையால் சுமார் 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், வியாழக்கிழமை அதிகாலை 4 மணிவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

DIN


மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த மழையால் சுமார் 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், வியாழக்கிழமை அதிகாலை 4 மணிவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும், எட்டு பேரை காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வந்தது. இது, கடந்த 1,000 ஆண்டுகளில் மிக அதிகபட்ச மழை அளவாகும்.
இந்த மழைக்கு இதுவரை 33 போ் பலியாகியுள்ளனா். இதுதவிர, வெள்ளத்தில் 8 போ் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்து நிறைந்த பகுதியிலிருந்து  3,76,000 போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக மாகாண அவசரநிலை மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

மழைநீர் 215,200 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தியுள்ளது, இதனால் சுமார் 1.22 பில்லியன் யுவான் (சுமார் 188.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளில் ராணுவத்தினா் மட்டுமன்றி, காவல்துறையினா், தீயணைப்பு வீரா்கள், உள்ளூா் பணியாளா்கள் ஆகியோா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, மூன்று நாள்களுக்கு மழை தொடரும்  வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

சிவகங்கையில் இளைஞா் கொலை: 9 போ் கைது

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற முடிவு செய்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT