இளையான்குடி ஒன்றியம் கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி பயனாளிகளுக்கு கரோனா நிவாரணம் வழங்கினார். 
தற்போதைய செய்திகள்

இளையான்குடி ஒன்றியத்தில் நியாய விலைக் கடைகளில் கரோனா நிவாரணம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் சனிக்கிழமைநியாய விலைக் கடைகள் மூலமாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் சனிக்கிழமைநியாய விலைக் கடைகள் மூலமாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

 இளையான்குடி ஒன்றியம் கண்ணமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தின் நியாய விலைக் கடை மற்றும் நகரில் உள்ள நியாய விலைக் கடைகளில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி கலந்து கொண்டு அரிசி அட்டைதாரர்களுக்கு முதல் தவணை  கரோனா நிவாரணம் ரூ. 2 ஆயிரம் வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் இளையான்குடி வட்டாட்சியர் ஆனந்த், வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன்,திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப. மதியரசன், திமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆறு. செல்வராசன், தமிழ்மாறன் வெங்கட்ராமன், நஜிமுதீன், கண்ணமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப.தமிழரசன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT