தற்போதைய செய்திகள்

தேனி: லோயர் கேம்ப் மின்சார நிலையத்தில்  மான் தவறி விழுந்து உயிரிழப்பு 

DIN

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள சிறு புனல் மின் நிலையத்தில் உள்ள  முல்லைப் பெரியாற்றில் மான் தவறி விழுந்து உயிரிழந்தது.

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே கூடலூர் சாலையில்  உள்ளது சிறு புனல் மின்நிலையம். இதில் 2 மெகா வாட் மின்சார உற்பத்தி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மின் நிலையத்திற்கு வரும் முல்லைப் பெரியாறு தண்ணீரில் மான் ஒன்று இறந்து நிலையில் மிதந்தது.

இதுபற்றி மின் நிலைய பணியாளர்கள்  கூடலூர்  வன சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

கூடலூர் வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வனத்துறையினர்  கால்நடை மருத்துவர் செல்வம் மூலம்  உடற்கூறு விசாரணை செய்து, அருகில் உள்ள வனப்பகுதியில் புதைத்தனர்.

இதுபற்றி வனத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, 6 வயதுள்ள பெண் மிளா மான் என்றும், உடலில் காயங்கள் உள்ளன என்றும், செந்நாய்கள்  விரட்டியதால் முல்லைப் பெரியாற்றில் தவறி விழுந்து  உயிரிழந்திருக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பூ வியாபாரியைத் தாக்கி பணம் பறிப்பு: மூவா் கைது

காரைக்குடியில் மே 19- இல் கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT