ஷில்பா கௌதம் மற்றும் சௌரவ் மீனா இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், ஷில்பாவின் சடலம் சௌர்வ் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஷில்பா கௌதம் மற்றும் சௌரவ் மீனா இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக ஷில்பாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், ஷில்பாவின் தந்தை இருவரும் 3 மாதங்களுக்கு முன்புதான் சந்தித்துக் கொண்டதாகத் தெரிகிறது.
இந்திய வருவாய்த்துறையில் அதிகாரியான சௌரவ் மீனாவும், பெல் (பிஎச்இஎல்) நிறுவனத்தின் மனிதவள அதிகாரியாகப் பணிபுரியும் ஷில்பா கௌதமும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஷில்பாவின் தந்தை ஓ.பி.கௌதம், ”ஷில்பாவும் சௌரவும் டேட்டிங் செயலி மூலம் சந்தித்துக் கொண்டனர். சௌரவ், ஷில்பாவை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்; ஆனால், காலம் தாழ்த்தினார்; இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதால், சௌரவ் ஷில்பாவை உடல்ரீதியாகவும் தாக்கியுள்ளார்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், நொய்டாவில் உள்ள சௌரவின் அடுக்குமாடிக் குடியிருப்பில், தூக்கில் தொங்கிய நிலையில் ஷில்பாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஷில்பாவின் தந்தை அளித்த புகாரின்பேரில், போலீசார் தெரிவிப்பதாவது, ”ஷில்பாவின் தந்தை, சௌரவ் தனது மகள் ஷில்பாவை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டினார். சௌரவ் ஷில்பாவை திருமணம் செய்வதாகக் கூறி பொய்யான வாக்குறுதிகளை அளித்து, தவறாக நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார். இதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சௌரவை கைது செய்துள்ளனர். ஷில்பாவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது; இருவரின் மொபைல் போன்களையும் சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.