முக்கியச் செய்திகள்

மரியாதை நிமித்தம் மசூதியில் வழிபாடு செய்தால் மதம் மாறி விட்டேன் என்பதா? நடிகர் சூர்யா வருத்தம்!

KV

ஒரு புத்தகத்தை அதன் அட்டையையையோ முகப்புப் பக்கத்தையோ மட்டுமே வைத்து தீர்மானிப்பது எத்தனை தவறோ... அப்படியே தான் ஆகி விட்டது சமீபத்தில் இணையத்தில் பரவி பரபரப்பாக பேசப்பட்ட சூரியாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ குறித்த வதந்திகள். சூர்யா மதம் மாறி விட்டார் என்று தவறான பிரச்சாரத்துக்கு வழி வகுத்த அந்த வீடியோ இது தான்;

சிங்கம்-2 படப்பிடிப்புக்காக 2013 ஆம் வருடம், ஆந்திர மாநிலம் கடப்பாவுக்குச் சென்றிருந்த சூர்யா, தற்செயலாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயாரது அழைப்பை ஏற்று கடப்பா அமீர் பீர் தர்ஹாவுக்குச் சென்றதாகவும்,  அங்கு மசூதியில் தொழுகை வழிபாட்டில் கலந்து கொண்டதாகவும், அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை தவறாகக் கற்பிதம் செய்து கொண்டு  தற்போது தான் மதம் மாறி விட்டதாக இணையத்தில் வதந்திகள் பரப்பப் படுவதாகவும் இது குறித்து சூர்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

தொழுகையின் போது மசூதியில் எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பரவிய வேகத்தில், உடனே சூர்யா இஸ்லாத்திற்கு மதம் மாறி விட்டார் என்று ஒரே பரபரப்பாகி விட்டது. மசூதியில் சூர்யா, தலையில் இஸ்லாமியர்களைப் போல குல்லா அணிந்து கழுத்து நிறைய மாலைகளுடன் காட்சி தரும் புகைப்படங்களும், வீடியோவும் இணையத்திலும், யூ டியூபிலும் வைரலாகிக் கொண்டிருப்பது தான் லேட்டஸ்ட் சென்ஷேசன். தற்போது சூர்யா தரப்பில் அந்த வீடியோ ரசிகர்களிடையே தவறான அனுமானத்தை தருவதாகக் கருதி நீக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: மோடி பின்னடைவு

விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை!

தென்சென்னையில் தமிழச்சியும், தூத்துக்குடியில் கனிமொழியும் முன்னிலை!

பிரதமர் மோடி பின்னடைவு!

நெல்லையில் நயினார் நாகேந்திரன் முன்னிலை!

SCROLL FOR NEXT