செங்கல் சூளைகளுக்காக அழிக்கப்பட்டு வரு மோடிகுப்பம் சமூகம் காடு 
சிறப்புச் செய்திகள்

செங்கல் சூளைகளுக்காக அழிக்கப்படும் சமூக காடுகள்!

தனியார் செங்கல் சூலைகளுக்காக கிருஷ்ணகிரி அருகே உள்ள சமூக காட்டில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. 

DIN

கிருஷ்ணகிரி: தனியார் செங்கல் சூளைகளுக்காக கிருஷ்ணகிரி அருகே உள்ள சமூக காட்டில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் வட்டத்திற்கு உள்பட்ட மோடிகுப்பம் ஊராட்சி க்கு சொந்தமான சமுக காடு உள்ளது  சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த சமூக காட்டில். வேம்பு, துருஞ்சி, புளி, புரசி, வெப்பாலம், அலுஞ்சி மற்றும் பல வகையான மரங்கள் உள்ளன. 

சுமார் 50-60 வயதுடைய இந்த மரங்களை தனியார் செங்கல் சூளை களுக்காக சமூக விரோதிகள் இந்த மரங்களை வெட்டி, டிராக்டர்கள், லாரிகள் மூலம் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது. 

செங்கல் சூளைகளுக்காக அழிக்கப்பட்டு வரு மோடிகுப்பம் சமூகம் காடு

குறிப்பாக கிருஷ்ணகிரி வட்டம், கிட்டம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ள செங்கல் உரிமையாளர்கள் இந்த சமூக காடுகளை அழிக்கும் பணியில் ஈடுபடுவதாக தெரிகிறது. இதுவரையில் 200 டன்னுக்கு மேற்பட்ட மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கரோனோ தொற்று பாதிப்பால் பிராணவாயு கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் நிலையில், பிராணவாயுவை அள்ளி வழங்கும் சமூக  காட்டை அழிக்கும் செயலில் ஈடுபடும் சம்பவம், இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்க வேண்டும் என  இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT