தற்போதைய செய்திகள்

12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு!

ஓவியம், உடற்கல்வி, கைத்தொழில் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பணிபுரிய தற்காலிக ஆசிரியப் பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் நிரப்பப் பட்டன. அந்த ஆசிரியர்களுக்கு முதலில் நிர்ணயிக்கப் பட்ட சம்பளத் தொகை ரூ.5000

RKV

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஓவியம், உடற்கல்வி, கைத்தொழில் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பணிபுரிய தற்காலிக ஆசிரியப் பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் நிரப்பப் பட்டன. அந்த ஆசிரியர்களுக்கு முதலில் நிர்ணயிக்கப் பட்ட சம்பளத் தொகை ரூ.5000 அது பின்னர் 2007 ஆம் ஆண்டில் ரூ.7000 உயர்த்தப் பட்டது. தற்போது இப்படி தற்காலிகமாக நியமிக்கப் பட்ட ஆசிரியர்களை நிரந்தரமாக்கி அவர்களுக்கும் நிரந்தர ஆசிரியர்களுக்குரிய வகையில் சம்பள உயர்வு, பணியிட மாற்றம், பணிச்சேவை ஊக்கத் தொகைகள் முதலியவற்றைப் பெற்றுத் தரும் வகையில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT