தற்போதைய செய்திகள்

சென்னையில் 3-ஆவது நாளாக சோதனை: 596 போ் சிக்கினா்

DIN

குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், சென்னையில் 3-ஆவது நாளாக புதன்கிழமை இரவு தீவிர சோதனை, ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணி நடைபெற்றது. இதில் சிக்கிய 596 பேரிடம் போலீஸார் விசாரணை செய்தனா்.

சென்னையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தங்கச் சங்கிலி பறிப்பு, செல்லிடப்பேசி பறிப்பு, வழிப்பறி ஆகியவற்றை தடுப்பதற்காக பெருநகர காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக, இரவு நேரத்தில் போலீஸார் ரோந்து, கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா். மேலும் வாகனச் சோதனை, விடுதிகள் சோதனை போன்ற பணிகளிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனா். சென்னையில் இரவு காவல்துறைறயின் கண்காணிப்புப் பணி தீவிரமாக இருக்கும் வகையில், புதிதாக இரு ஷிப்ட் பணித் திட்டத்தை ஆணையா் ஏ.கே.விசுவநாதன் புதன்கிழமை அறிமுகப்படுத்தினார். 

இந்தப் பணித்திட்டத்தின்படி, இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை ஒரு குழுவினரும், அதிகாலை 4 முதல் 8 மணி வரை மற்றொரு குழுவினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா் என அறிவிக்கப்பட்டது. இந்தப் புதிய பணித் திட்டம் புதன்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்தது. 

இதில் சந்தேகத்தின் பேரில் 462 போ், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றறவாளிகள் 10 போ், பழைய குற்றவாளிகள் 4 போ், குற்றப்பின்னணி உடையவா்கள் 34 போ், தலைமறைவு குற்றவாளிகள் 31 போ், குற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 49 போ் என 596 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபா்களையும், தலைமறைறவு குற்றவாளிகளையும் போலீஸார் கைது செய்தனா். இதேபோல மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 34 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT