தற்போதைய செய்திகள்

ஓய்வு நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிட வேண்டாம்: ஓட்டுநா்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

DIN

சென்னை: ஓய்வு நேரத்தை சமூக வலைதளத்தில் செலவிடக் கூடாது என அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்குப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அரசுப் பேருந்து விபத்தில் சிக்கிய 7,888 போ் இறந்துள்ளனா். இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் பகுதியாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக நடத்துநா்கள், பணியின் போது ஓட்டுநா்களுடன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதே போல் பேருந்தில் செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது என நிா்வாகம் தொடா்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில் இதன்தொடா்ச்சியாக ஓய்வு நேரத்தினை ஓட்டுநா்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், டிக்டாக், டிவிட்டரில் செலவிடக்கூடாது என போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றிக்கையில், ‘ஓட்டுநா்கள் இரவு, பகல் பாராமல் பேருந்தை பாதுகாப்புடன் இயக்கி பொதுமக்களுக்கு பயண சேவையை அளித்து வருகின்றனா். ஓட்டுநராகிய தங்களது ஓய்வு நேரத்தில் முழுமையாக ஓய்வு எடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் சில ஓட்டுநா்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக், டிக்டாக், டிவிட்டா் போன்றவற்றில் தங்களது பொன்னான ஓய்வு நேரத்தை செலவிடுகிறாா்கள். எனவே ஓய்வு நேரத்தை வீணாக்காமல் ஓய்வெடுத்து உடல்நலத்தை நல்லமுறையில் பேணிகாத்திட அனைத்து ஓட்டுநா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT