தற்போதைய செய்திகள்

கரோனா சிகிச்சை பெறுவோருக்கு உதவ பள்ளிவாசல் சார்பில் 12 பேர்

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உதவிக்காக, பள்ளிவாசல்களின் சார்பில் 12 பேர் அனுப்பப்படுவதாக கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாயில் செயலர்  ஜே.எம்.ஏ. ஷேக் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர், கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட ஜமாஅத் நிர்வாகிகளை திங்கள்கிழமை  அழைத்துப் பேசினார். அப்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பவர்களை சிறந்த முறையில் கவனித்துக் கொள்வதாகவும் அத்தியாவசிய தேவைகளுக்கான உதவியாளர்களை மக்களே அனுப்புமாறும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார் என ஷேக் அப்துல் காதர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, திருவாரூர், கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட ஊர்களிலிருந்து 12 பேரைத் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஜமாஅத் சார்பில் கரோனா சிகிச்சை பெறுவோருக்கு  உதவுவதற்காக அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரின் கூட்டத்தில், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பள்ளிவாசல்களிலிருந்து நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT