சத்யேந்தர் ஜெயின், நல்வாழ்வுத் துறை அமைச்சர், தில்லி 
தற்போதைய செய்திகள்

'தில்லியில் கரோனா: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் (68%) மாநாடு தொடர்புள்ளவர்கள்'

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 68 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், நிஜாமுதீன் மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள்...

DIN

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 68 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், நிஜாமுதீன் மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தில்லி மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்த ஜெயின், தொற்று பாதித்துள்ள 1,578 பேரில் 1,080 பேர் (68.4 சதவிகிதம்) மாநாடு தொடர்புடையவர்கள் என்றார்.

பாதிக்கப்பட்ட 1,578 பேரில் 867 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் 32 நோயாளிகள் செயற்கை சுவாச சாதன உதவியுடனும் இருக்கின்றனர். இறந்தவர்கள் 32 பேர் .

மேலும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT