தற்போதைய செய்திகள்

ராமகிருஷ்ண மடம் மாணவர் இல்லம் சார்பில் 4,000 குடும்பத்தினருக்கு உதவி

DIN

கும்மிடிப்பூண்டி : சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடம் மாணவர் இல்லம் சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கம், மாநெல்லூர் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் 4,000 பழங்குடி இன மக்களுக்கு நிவாரண உதவிகள் ஞாயிறன்று வழங்கப்பட்டன.

ராமகிருஷ்ண மடம் மாணவர் இல்ல செயலாளர் சத்ய ஞானானந்தர் மேற்பார்வையில் 17 பேர் கொண்ட குழுவினர் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் பழங்குடி இன மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 18 பொருள்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினர்.

கண்ணம்பாக்கத்தில் ஊராட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார்,  துணைத் தலைவர் மாலதி குணசேகரன், கவுன்சிலர் ரோஜா ரமேஷ்குமார் பங்கேற்றனர்.

மாநெல்லூரில் ஊராட்சி  தலைவர் லாரன்ஸ் தலைமையிலும், சூரப்பூண்டியில் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார், ஊராட்சித் தலைவர் வாணிஸ் ரீபாலசுப்பிரமணியம், கண்ணன்கோட்டையில் ஊராட்சித் தலைவர் கோவிந்தசாமி, செதில்பாக்கத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் உமா மகேஷ்வரி, பூவலம்பேட்டில் ஊராட்சித் தலைவர் வெங்கடாசலபதி ஆகியோர் தலைமையில் ராமகிருஷ்ண மடம் மாணவர் இல்லத்தினர் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT