FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாணியம்பாடி காவல் நிலையம் மூடல்: பெண் ஆய்வாளருக்கு கரோனா தொற்று

வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கரோனா வைரஸ் தொற்று  கண்டறியப்பட்டுள்ளதால் காவல் நிலையம் மூடப்பட்டது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கரோனா வைரஸ் தொற்று  கண்டறியப்பட்டுள்ளதால் காவல் நிலையம் மூடப்பட்டது.

இதனால் இந்தக் காவல் நிலைத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களைத் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து காவல் நிலையமும் பூட்டப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர் முழுவதும் 100 சதவிகித கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் வாணியம்பாடி கிராமிய பெண் ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் பணிபுரியும் 43 காவலர்களும் தற்போது தனியார் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, வாணியம்பாடி கிராம பெண் ஆய்வாளர் தங்கியிருந்த செட்டியப்பனூர் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மருத்துவக் குழுவினர், வருவாய்த் துறையினர் என அனைவரும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து வாணியம்பாடி கிராம காவல் நிலையமும் பூட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments