தற்போதைய செய்திகள்

மானாமதுரை வீரழகர் கோயிலில் ஆடி பிரமோற்சவ விழா தொடங்கியது

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயிலில் ஆடி பிரமோற்சவ விழாவில் பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குள்பட்ட மானாமதுரை வீரழகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா, ஆடி மாதம் ஆடி பிரமோற்சவ விழா நடத்தப்படும். 

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து கரோனா  தொற்று பரவல் பிரச்னை நீடித்ததால் ஆடிப் பிரமோற்சவ விழாவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் ஆடி பிரமோற்சவ விழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து தற்போது வீரழகர் கோயிலில் ஆடி பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. தினமும் உற்சவர் சுந்தரராஜப் பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று பூஜைகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடந்த திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 

அதன்பின் ஆச்சாரியார்கள் திருமணத்துக்கான சம்பிரதாய பூஜைகளை நடத்தி வைத்து பின்னர் சுவாமி சார்பில் கோயிலில் படிதாண்டா தாயாராக எழுந்தருளியுள்ள மூலவர் செளந்திரவல்லித்தாயார் சன்னதியிலிருக்கும் உற்சவருக்கு திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றது. அதன்பின் சுவாமி கோயில் வளாகத்துக்குள் உலா வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT