ஒடிசாவில் புதிதாக 1,384 பேருக்கு கரோனா: 9 பேர் பலி
ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,384 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்தனர்.
புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,384 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 9 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 216-ஆக அதிகரித்துள்ளது.
9 உயிரிழப்புகளில் 6 பேர் கஞ்சம் பகுதியை சேர்ந்தவர்கள். புரி, ஜெய்ப்பூர், கோர்தா பகுதியை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்தனர்.
கஞ்சம் பகுதியில் அதிகபட்சமாக 288 பேரும், கோர்தா பகுதியில் 201 பேரும், கட்டாக் பகுதியில் 121 பேரும், சாம்பல்பூர் பகுதியில் 82 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் 14,350 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 23,073 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.