முகப்பு
தற்போதைய செய்திகள்

அறந்தாங்கி தினமணி செய்தியாளர் ஏ. கார்த்திகேயன் சாலை விபத்தில் மரணம்

அறந்தாங்கியின் தினமணி பகுதி நேர நிருபர் அ. கார்த்திகேயன் (54) சாலை விபத்தில் புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

Updated On : 19 ஆகஸ்ட், 2020 at 12:28 PM
அறந்தாங்கி அ. கார்த்திகேயன்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியின் தினமணி நாளிதழ் பகுதிநேர நிருபர் அ. கார்த்திகேயன் (54) சாலை விபத்தில் புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

திருச்சிக்குத் தனது சொந்த வேலையாக இரு சக்கர வாகனத்தில் வந்தபோது திருச்சி எம்ஐஇடி கல்லூரி அருகே லாரி மோதி விபத்து நேரிட்டது.

இதில் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி கார்த்திகேயன் உயிரிழந்தார்.

Advertisement

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனை நடைபெறவுள்ளது.

நவல்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.