முகப்பு
தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 6, 2020

செய்திகள் - படங்களில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:45 PM
பகிர்:

பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய ரஷியாவின் சோயுஸ்  எம்எஸ்-13 விண்கலத்திலிருந்து வெளியே வர  அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச்சுக்கு உதவுகிறார்கள் ரஷிய விண்வெளி முகமையின் மீட்புக் குழு வீரர்கள். விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த கோச், இத்தாலிய விண்வெளி வீரர் லூக்கா பார்மிடானோ, ரஷிய வீரர் அலெக்சாந்தர் வோர்ட்சௌ ஆகியோர், விண்கலத்தில் வந்து கஜகஸ்தான் பகுதி ஸ்தெப்பிப் புல்வெளியில் பத்திரமாகத் தரையிறங்கினர்.

பாராசூட் விரித்துத் தரையிறங்கும் ரஷியாவின் சோயுஸ் எம்எஸ்-13 விண்கலம்.

புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் தொழுநோய் ஒழிப்புக்கான சர்வதேச காந்தி விருதை டாக்டர் என்.எஸ். தர்மஷக்துவுக்கு வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

புது தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சீமாபுரி தொகுதியில் வியாழக்கிழமை  தேர்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான அமித் ஷா.

மகாராஷ்டிரத்தில் ஷிர்டியில் சாயிபாபா ஆலயத்தில் வியாழக்கிழமை வழிபட்டார் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்.

சீனாவில் வூஹான் மருத்துவமனையில் தற்காலிக மருத்துவமனையொன்றில் கரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இடையே கவசமணிந்தவாறு நடந்துசெல்லும் மருத்துவப் பணியாளர்.

தென் கொரியாவில் பூஷன் நகர அரங்கில் வேலைவாய்ப்புத் திட்ட நிகழ்ச்சியொன்றின் கொண்டாட்ட நிகழ்வின்போது, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முகக் காப்பு அணிந்தபடி கலந்துகொண்ட தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்  (வலமிருந்து மூன்றாவது).

மேற்குக் கரை நகரான ஜெனினில் இஸ்ரேலிய ராணுவத்தினரால் தாக்கியழிக்கப்பட்ட வீட்டைப் பார்க்கும் பாலஸ்தீனர்கள். தாக்குதல் ஒன்றில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவரின் வீட்டைத் தாக்கி அழித்ததாக இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அழிந்த வீடு - மற்றொரு கோணத்தில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.