முகப்பு
தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 15, 2020

செய்திகள் - படங்களில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:52 PM
பகிர்:

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய கலந்தாய்வுக் கூட்டத்தில் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் உயர் அலுவலர்கள்.

சீனாவில் பெய்ஜிங் ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை முகக்கவசம் அணிந்தவாறு வெளியே வரும் பயணிகள். பிற இடங்களிலும் பெய்ஜிங் மாநகருக்கு வருவோர் பாதுகாப்பு கருதி, வீட்டிலேயோ அல்லது தனி முகாம்களிலோ தனித்திருக்க வேண்டும் என்று தலைநகர் பாதுகாப்புக் குழுவினர ்அறிவித்துள்ளனர்.

குஜராத்தில் ஆமதாபாத்திலுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநிலத்  தலைமையகத்தை சனிக்கிழமை திறந்துவைக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.

புது தில்லி ராம்லீலா திடலில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவையொட்டி, முதல்வர் அரவிந்த கேஜரிவால் படங்கள் அச்சிடப்பட்ட பேனர்களைத் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள்.

குஜராத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவுள்ள விளையாட்டு அரங்கம். முன்னால் பார்வையிட வந்த காவல்துறை மற்றும் அரசு அலுவலர்களின் கார்கள்.

கொல்கத்தாவில் சனிக்கிழமை டெங்கு பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்ட மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள்.

புது தில்லி இந்தியா கேட் அருகே சனிக்கிழமை நடைபெற்ற பன்னாட்டுப்  பழைய கார்கள் அணிவகுப்பில் பங்கேற்ற கார்கள்.

பழங்கால கார்கள் கண்காட்சியில் பங்கேற்ற பழங்கால லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்கள்.

பிளாரிடாவில் டேடோனாவிலுள்ள டேடோனா பன்னாட்டுப் பந்தயச் சாலையில் ஒரு திருப்பத்தில் மோதிக்கொண்டு தீப்பற்றிய பந்தயக் கார்கள்.

சிலியில் சான்டியாகோ நகரில் இதய வடிவ பலூன்களைக் கடந்து செல்லும்  ஒரு பெண்மணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.