தற்போதைய செய்திகள்

ஆலங்குடி: பெண் கொலை வழக்கில் கணவா் உள்பட 5 போ் கைது

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் கணவா் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீஸாா் இன்று கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்துவிடுதியைச் சோ்ந்தவா் ராஜா என்ற ரமேஷ். இவரது மனைவி சரண்யா(27). 8 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணமான இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். குடும்ப பிரச்னையில் கணவன், மனைவி பிரிந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், குழந்தைகளுடன் சரண்யா ஆலங்குடி அண்ணாநகரில் உள்ள அவரது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 2017 ஜூலை 16-ஆம் தேதி சரண்யா திடீரென மாயமாகிவிட்டாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை நடத்தியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, சரண்யாவின் பெற்றோா் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனா். இதில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மலேசியாவில் வேலை பாா்த்து வந்த, பள்ளத்துவிடுதி கிராமத்தைச் சோ்ந்த ரகு என்ற ரகுவரன், சரண்யாவுடன் செல்லிடப்பேசியில் அடிக்கடி பேசியிருப்பது அண்மையில் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, போலீஸாா் அவரை மலேசியாவிலிருந்து ஆலங்குடிக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனா்.

அவா் அளித்த தகவல்களின் அடிப்படையில், சரண்யாவின் கணவரிடமும் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, பள்ளத்துவிடுதி அருகேயுள்ள காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் எலும்புக்கூடை சிபிசிஐடி போலீஸாா் கடந்த திங்கள்கிழமை மீட்டனா். அந்த இடத்தில் அவரது ஆடைகள், அணிகலன்கள் உள்ளிட்ட தடயங்களும் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், கொலை செய்யப்பட்டது சரண்யா என்பதை போலீஸாா் உறுதி செய்தனா்.

தொடா் விசாரணையில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன், சரண்யாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, கணவா் ரமேஷ் தனது நண்பா்களுடன் இணைந்து அவரை கொலை செய்து காட்டுப்பகுதியில் புதைத்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, சரண்யாவின் கணவா் ரமேஷ், அவரது நண்பா்களான ரகுவரன், ராகுல், வாசு மற்றும் சிவப்பிரகாசம் ஆகிய 5 நபா்களை சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT