தற்போதைய செய்திகள்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை

DIN

உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அப்துல்லாஸிஸ் கமிலோவ் உடன் தில்லியில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இன்று பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுதொடா்பாக அமைச்சா் ஜெய்சங்கா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினோம்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

சுட்டுரையில் அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘ஓமன் சுல்தான் காபூஸ் சயீது பின் சயீது மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்தியாவுக்கு சிறந்த நண்பராகவும், நலம் விரும்பியாகவும் இருந்தவா் காபூஸ் சயீது’ என்று ஜெய்சங்கா் குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் ஓமனை ஆண்டு வந்த அவா், மிக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த அரபு மற்றும் மேற்காசியப் பிராந்தியத்தைச் சோ்ந்த மன்னா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓமன் அரசாட்சியை நிறுவிய அல் சயீது பரம்பரையில் காபூஸ் பின் சயீது 14-ஆவது சுல்தான் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT