இறந்த மயிலுடன் விக்னேஷ். 
தற்போதைய செய்திகள்

பேர்ணாம்பட்டு அருகே மயிலை சுட்டுக் கொன்றவர் கைது

பேர்ணாம்பட்டு அருகே தேசியப் பறவையான மயிலை சுட்டுக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

DIN

குடியாத்தம்: பேர்ணாம்பட்டு அருகே தேசியப் பறவையான மயிலை சுட்டுக் கொன்றவர் கைது செய்யப்பட்டார். பேர்ணாம்பட்டு வனச்சரக அலுவலர் எல். சங்கரய்யா, வனவர்கள் ஏ. மோகனவேல், பி. ஹரி, சி. திருநாவுக்கரசு, பி. புருஷோத்தமன் ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் பத்தரபல்லி வனச்சரகத்துக்கு உள்பட்ட கம்மசமுத்திரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அடர்ந்த வனப்பகுதியில் இருந்து இறந்த மயிலுடன் வந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மதினாப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் விக்னேஷ்(21) என்பதும், விலங்குளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் வந்தபோது, மயிலை சுட்டுக் கொன்றதும், அதை விற்பனைக்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. 

அவரிடமிருந்து உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி, இறந்த பெண் மயில், வெடிமருந்து அடங்கிய பை, நெற்றி பேட்டரி ஆகிவை பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு விக்னேஷை கைது செய்த வனத்துறையினர் அவரை குடியாத்தம் குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்திவிட்டு, சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நவ. 6-இல் வாக்குப்பதிவு: பிரசாரம் முடிவு!

ஐஸ் குல்பி... சாக்‌ஷி மாலிக்!

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’? வாக்குப்பதிவு தொடங்கியது!

சினேகிதியே... அதுல்யா ரவி!

SCROLL FOR NEXT