தற்போதைய செய்திகள்

ஐக்கிய அரபு நாடுகளில் விசா அபராதங்கள் ரத்து

ஐக்கிய அரபு நாடுகளில் விசா பெற்று வந்தவர்கள் அனுமதிக் காலங்கடந்து தங்கியிருந்தாலும் அபராதங்கள் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்று ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளது.

DIN

துபை: ஐக்கிய அரபு நாடுகளில் விசா பெற்று வந்தவர்கள் அனுமதிக் காலங்கடந்து தங்கியிருந்தாலும் அபராதங்கள் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்று ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளுக்கு வந்து  மார்ச் முதல் தேதி விசா காலம் முடியும் அனைத்து வகையான நுழைவு அனுமதி பெற்றிருப்போரும் அபராதக் கட்டணங்கள் செலுத்த வேண்டாம் என்று அரபு நாடுகளின் அதிபர் ஷேக் கலீபா பின் சயத் அல் நயன் தெரிவித்துள்ளார்.

தவிர, மே 18 ஆம் தேதிக்குப் பிறகு தங்கள் நாடுகளுக்குத் திரும்ப விரும்புவோருக்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் கமீஸ் அல் காபி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT